சேலம், மார்ச் 7-
சேலம் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மூலம் நிதி உதவிகள் பெற்று வரும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் விதவையர்கள் தங்கள் விபரத்தினை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தெரிவித்தாவது: சேலம் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மூலம் மாதாந்திர நிதியுதவி, கண்பார்வையற்றோர் நிதியுதவி, பக்கவாத நிவாரண நிதியுதவி, புற்றுநோய் நிவாரண நிதியுதவி, மனவளர்ச்சி குன்றியோர் நிவாரண நிதியுதவி, இரண்டாம் உலகப்போர் முன்னாள் படைவீரர் நிதியுதவி, இரண்டாம் உலகப்போர் விதவையர் நிதியுதவிகள் பெற்று வரும் முன்னாள் படை வீரர்கள், விதவையர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் சேலம் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மணியார்டர் ரசீது ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி தாங்கள் உயிருடன் இருக்கும் விபரத்தை உறுதி செய்ய வேண்டும்.மிகவும் வயதான காரணத்தாலும், நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தாலும் அலுவலகம் வர இயலாத நிலையில் உள்ளோர் மட்டும் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உயிர்ச்சான்று பெற்று சமர்ப்பிக்குமாறும், மருத்துவ நிதியுதவி பெறும் பயனாளிகள் உரிய படிவத்தில் பதிவு பெற்ற மருத்துவடமிருந்து மருத்துவச்சான்று பெற்று சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: