பனாஜி:
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார். 62 வயதான பாரிக்கர் கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவில் மருத்துவர்கள் கண்காணிப்புடன் அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக, கோவாவில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை சந்தித்து மனோகர் பாரிக்கர் ஆலோசனை நடத்தினார்.

Leave A Reply

%d bloggers like this: