பொள்ளாச்சி, மார்ச் 7-
பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டியில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி அனுப்பர்பாளையத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் சபரிபிரகாஷ். இவருக்கு திருமணமாகி ஒருமாதம் தான் ஆகிறது. இவரது நண்பர் திருப்பூரை சேர்ந்த ராமராஜ். இருவரும் கோவை உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் செவ்வாயன்று ராமராஜ் அனுப்பர்பாளையத்தில் உள்ள சபரிபிரகாஷ் வீட்டிற்கு வநதுள்ளார். புதனன்று காலை பொள்ளாச்சி பேருந்து நிலையம் செல்ல இருவரும் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். ஊஞ்சவேலாம்பட்டி அருகே வந்தபோது முன்னாள் சென்றுக் கொண்டிருந்த அரசுப்பேருந்து மீது கார் வேகமாக மோதி விபத்துள்ளானது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நீண்ட நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த காரை கிரேன் மூலம் மீட்டனர். அப்போது காரின் உள்ளே இருந்த சபரிபிரகாஷ் மற்றும் ராமராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தெரியவந்தது. பின்னர் இருவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: