சேலம், மார்ச் 7-
சேலத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற்று பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டம், நிலவாரப்பட்டி கிராமத்தில் நுண்ணீர் பாசனத்தின் மூலம் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் ம.செந்தமிழ்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விக்கு பின் அவர் தெரிவித்ததாவது. பாசன நீரினைக் கொண்டு, பழக்கத்தில் உள்ள பாசன முறைகளின் மூலம் சாகுபடி செய்யப்படும் இறவை பரப்பினை அதிகரித்திட, நுண்ணீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத் தூவான் ஆகிய சிக்கன முறைகளை கடைபிடிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு இத்திட்டத்தில் சேலம் மாவட்டத்திற்கு நுண்ணீர் பாசன அலகுகள் ரூ.1449 லட்சம் மதிப்பில் 1850 எக்டரில் அமைத்திடவும், தெளிப்பு நீர் மற்றும் மழைத்துவான்கள் ரூ.481.280 லட்சம் மதிப்பில் 1500 எக்டர் பரப்பில் அமைத்திடவும், மொத்த மானியமாக ரூ.1930.280 இலட்சங்கள் வழங்கிடவும் இலக்கீடு பெறப்பட்டு நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டு வருகிறது.

இதில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி இத்திட்டதில் பயன்பெறலாம் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.