வேலூரில் பெரியார் சிலையை சேதப்படுத்தி கலவரம் ஏற்படுத்த முயன்ற பாஜகவினர் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பாஜக நகர செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இருந்த பெரியாரின் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக பாஜக தேசிய செயலாளர் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பெரியாரின் சிலை அகற்றப்படும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்ததற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பாஜகவினர் தமிழ் நாட்டில் வன்முறை தூண்டும் நோக்கில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.