கொல்கத்தா,
திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலை உடைக்கப்பட்டதன் எதிரொலியாக மேற்குவங்கத்தில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுராவில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் பாஜக வெற்றியடைந்தது. இதையடுத்து திரிபுராவில் வன்முறையை தூண்டும் வகையில் அங்கிருந்த லெனின் சிலையை பாஜக குண்டர்கள் தகர்த்தனர். சிலையை அகற்றும் போது பாரத மாதாகி ஜே என்று முழக்கமிட்டனர்.
இதைடுத்து செவ்வாயன்று இரவு மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஜன்சங்கத்தை நிறுவிய முன்னாள் அமைச்சர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்திவிட்டு சென்றனர். அவரது தலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட 7 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply