கொழும்பு:
இலங்கையில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக, சிங்கள பௌத்த மதவெறியர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு 10 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வன்முறை பரவாமல் தடுப்பதற்கு இலங்கை முழுவதும் சமூக வலைதளங்கள் 3 நாட்கள் முடக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இஸ்லாமியர்களைக் குறிவைத்து சிங்கள பௌத்த பிக்குகள் தலைமையில் நடக்கும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.இதனால், முதலில் அவசர நிலையைப் பிரகடனம் செய்த இலங்கை அரசு, தற்போது, இணையதள சேவையை 3 நாட்களுக்கு முடக்கியுள்ளது. ஏற்கெனவே, வன்முறைகள் அதிகம் நிகழ்ந்த கண்டி மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை முழுவதும் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 72 மணிநேரம் இந்த முடக்கம் அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: