புதுதில்லி:
புதிய, ‘ஆர்­டர்’கள் குறைந்­த­தால், நாட்­டின் சேவை­த் துறை வளர்ச்சி, பிப்ரவ­ரி­யில், மீண்டும் வீழ்ச்சி கண்­டுள்­ளது.

‘நிக்கி மார்­கிட்’ நிறு­வ­னம், இதுதொடர்பான தனது ஆய்வறிக்கையை வெளி­யிட்­டுள்ளது.
அதில், நாட்­டின், சேவை­கள் துறை வளர்ச்­சியை குறிக்­கும், என்.எம்.எஸ்.பி.எம்.ஐ., குறி­யீடு, பிப்­ர­வ­ரி­யில், 47.8 புள்­ளி­க­ளாக சரி­வ­டைந்து உள்­ளது. இது, 2017 ஆகஸ்­டுக்கு பின் காணப்­படும் மோசமான சரிவு நிலை­யா­கும்.இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், சேவை­கள் துறை வளர்ச்சி, 51.7 புள்­ளி­க­ளாக இருந்­தது. இக்­கு­றி­யீடு, 50 புள்­ளி­க­ளுக்கு கீழ் குறைந்­தால், அது, வளர்ச்சி பின்­ன­டைவை குறிக்­கும். அந்த வகையில் சேவைத்துறைகள் வளர்ச்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

“சேவை துறைக்­கான, தேவைப்­பா­டும், புதிய, ‘ஆர்­டர்’களும் குறைந்­துள்ளன; இதன் கார­ண­மாக, 2017 நவம்­ப­ருக்கு பின், சேவை துறை வளர்ச்சி, முதன்­மு­றை­யாக, பிப்­ர­வ­ரி­யில் வீழ்ச்சி கண்­டுள்­ளது; இது, 2017 ஆகஸ்­டுக்கு பின் ஏற்­பட்­டுள்ள பின்­ன­டைவு” என்று ஐ.எஸ்.எஸ்., மார்­கிட் நிறு­வ­னத்­தின் பொரு­ளா­தார வல்­லுநர் ஆஷ்னா தோதியா கூறியுள்ளார்.இந்­திய சேவை­கள் துறை­யில், தக­வல் தொழில்­நுட்­பம், வியா­பா­ரம், ஹோட்டல், சுற்­றுலா, போக்­கு­வ­ரத்து, நிதி, காப்­பீடு, ரியல் எஸ்­டேட், வர்த்­த­கம், கட்­டு­மா­னம் உள்­ளிட்ட துறை­கள் சார்ந்த சேவை­கள் அடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.