தீக்கதிர்

மேகாலயா:கன்ராட் சங்மா முதல்வராக பதவியேற்றார்

ஷில்லாங்
மேகாலய முதல்வராக கன்ராட் சங்மா இன்று பதவியேற்றார்.

மேகாலய மாநிலத்தில் 59 தொகுதிகளுக்கு நடந்த சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதேபோல் கான்ராட் சங்கமாவின் என்பிபிகட்சி 19 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனநாயக கட்சி 6 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 4 தொகுதிகளிலும், பாஜக, மலைப்பகுதி மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் வென்றன. மேலும் சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்றார். இதையடுத்து மேகாலய ஆளுநர் கங்கா பிரசாத்தை கடந்த ஞாயிறன்று சந்தித்த என்பிபி கட்சித்தலைவர் கான்ராட் சங்மா தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரினார். அப்போது அவர் என்பிபி 19 இடங்களிலும், ஐக்கிய ஜனதா கட்சி 6 இடங்களிலும்,மக்கள் ஜனநாயக முன்னனி 4 இடங்களிலும் மலைப்பகுதி மக்கள் கட்சி 2 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், சுயேட்சை 1இடத்திலும் என 34 எம்எல்ஏக்களின் அதரவு எனக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் என்பிபி தலைவர் கான்ராட் சங்மாவை ஆட்சியமைக்கும் படி ஆளுநர் கங்கா பிரசாத் திங்களன்று அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இன்று ஷில்லாங்கில் நடைபெற்ற விழாவில் கான்ராட் சங்மா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.