திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவை அடியோடு அகற்றுவோம் என தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் மேற்கு வங்க மாநிலம்  பங்குரா மாவட்டத்தில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் மீது பாஜகவினர் நடத்திய தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறேன். இனிமை இதுபோன்ற தாக்குதல்களை பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்கமாட்டேன். கார்ல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட்புரட்சியாளர் லெனின் ஆகியோர் எனது தலைவர்கள் அல்ல. ஆனால் இருவரையும் உலகில் ஏற்றுக்கொண்டவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ரஷ்யாவிற்கு பல நல்ல காரியங்களை செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் சிலைகள் இருக்கின்றன. லெனினுக்கு மட்டுமல்ல பல்வேறு தலைவர்களுககு பல்வேறு நாடுகளில் பல்வேறு சிலைகள் இருக்கிறது. இது அவர்கள் நம்பிக்கை சார்ந்த விஜயம்.

ஆனால் பாஜக திரிபுராவில் ஆட்சிக்கு வந்தவுடன், லெனின் சிலைகளை உடைப்பதற்கு பாஜகவிற்கு அதிகாரம் கொடுத்தது யார். இனி காந்திஜி, நேதாஜி சிலைகளை கூட அவர்கள் இடிக்க முற்படுவார்கள். அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அதிகார மமதையில் அளவுக்கு மீறி பாஜக ஆட்டம் போடுகிறது. இது நல்லதல்ல. மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மட்டுமல்ல எந்த கட்சியை சேர்ந்த தொண்டர்களையும் பாஜக தாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

திரிபுராவில் பாஜகவினர் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி வருகின்றனர். வன்முறையான சூழலை உருவாக்கி விட்டனர். இந்த வன்முறைக்கு எதிராக மற்ற கட்சிகள் குரல் கொடுக்கிறார்களோ இல்லையோ நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். எனது கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே சித்தாந்த ரீதியாக நிறைய வேடுபாடுகள் இருக்கிறது. இந்த சித்தாந்த மோதல்கள் தொடரும். அதே போல் பாஜக சிந்தாந்தத்திற்கும் எனக்கு நிறைய வேடுபாடுகள் இருக்கிறது. அந்த சித்தாந்தத்தையும் தொடர்ந்து தாக்குவேன். ஆனால் கட்சி தொண்டர்களை தாக்கி அதன் மூலம் வன்முறையை உருவாக்க மாட்டேன். அப்படி பாஜக மேற்கு வங்கத்தில் தாக்க முயன்றால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். பாஜகவின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம் என அறிவித்திருக்கிறது. ஆனால் எங்களின் அடுத்த இலக்கு மோடியை செங்கோட்டையில் இருந்து அகற்றி விட்டு அங்கே அமர்வதுதான். நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதை அனுமதிக்க முடியாது. அதனை அடியோடு அகற்றியே ஆகவே வேண்டும் அதையே நாங்கள் விரும்புகிறோம் என்று பேசும் போது தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.