ஹைதராபாத்:
உலக கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சமீபத்தில் நடைபெற்றது.இந்த தொடரில் மகளிருக்கான வால்ட் பிரிவில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அருணா ரெட்டி கலந்து கொண்டார்.இறுதி சுற்று வரை அபாரமாக விளையாடிய அருணா ரெட்டி 13.649 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் பதக்கத்தை வென்றார். உலக கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் முறையாக பதக்கம் பெற்று கொடுத்த அருணா ரெட்டிக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அருணா ரெட்டிக்கு ரயில்வேயின் சி-பிரிவில் வேலை வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: