மெல்போர்ன்:
கிரிக்கெட் உலகில் மிக குறுகிய காலத்தில் எளிதில் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு சாதனைகளை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.சச்சினின் சாதனைகளை முறியடிக்க பல கிரிக்கெட் வீரர்கள் முயன்று வரும் நிலையில்,அவரது சாதனைகளை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் முறியடிப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கூறியுள்ளார். இதுகுறித்து மெக்ராத் கூறியதாவது:
“தற்போதய சூழ்நிலையில் நான் கிரிக்கெட் விளையாடிருந்தால் கோலிக்கு கடும் நெருக்கடி கொடுக்க விரும்புகிறேன்.ஆனால் காலம் தான் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை.
கோலிக்கு பந்துவீசும் போது ரன்கள் விளாசும் திசைகளை கண்டறிந்து,அதை தடுக்க சரியான திசையில் பந்துவீச வேண்டும்.மிதமான வேகத்திலோ அல்லது புல்டாசாக வீசினால் பந்தை பிழிந்து விடுவார்.சச்சினையும்,விராட் கோலியையும் ஒப்பிட விரும்பவில்லை.கிரிக்கெட் விளையாட்டை பொறுத்த வரையில் ஒவ்வொரு வீரருக்கும் கால வேறுபாடு அதிகம் உண்டு.சச்சின் காலத்தில் ஏதுவான பந்துகளை தீர்மானித்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
விராட் கோலி அனைத்து பந்துகளையும் எதிர்கொண்டு அதிரடி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.இதுபோன்ற தொடர்ந்து ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சச்சினின் அனைத்து விதமான சாதனைகளை விரைவில் முறியடிப்பார் என நம்புகிறேன்” இவ்வாறு மெக்ராத் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.