ஈரோடு, மார்ச் 5-
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோர் வீட்டுமனைப்பட்டா கோரி கண்ணை கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாயகம் திரும்பிய சுமார் 700க்கும் மேற்பட்டோர் ஈரோட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, பெருந்துறை ஒன்றியம், வெள்ளோடு கிராமம் சென்னிமலை பாளையத்தில் அரசு சார்பில் 365 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதன்பின் தற்காலிகமாக வழங்கப்பட்ட பட்டாவை, நிரந்தர பட்டாவாக மாற்றி தருவதாக கூறி பட்டாக்கள் திரும்பப் பெறப்பட்டன.

ஆனால், இதுவரை இவர்களுக்கு மாற்று பட்டா வழங்கப்படவில்லை. ஆகவே தங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் வரும் மார்ச் 12 ஆம் தேதி வரை தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் எனக்கூறி திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: