நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம், கடற்கரை முதற் சாலையில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக் கழகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் பல்கலைக் கழகத்தின் ஆய்வகம், பதிவறை ஆகியன தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து போராடி மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

இங்கு செயல்படும் இந்தத் தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக் கழகம் தான் சென்னைக்குப் போகப் போகிறது என்று அரசு சார்பிலும் இந்தப் பல்கலைக் கழக வட்டாரத்திலும் அண்மைக் காலமாக பலமான பேச்சு அடிபட்டது.இதனை எதிர்த்து, நாகையில் பொது மக்கள், வணிகர்கள் மாணவ மாணவியர், அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.