ஈரோடு,மார்ச்.5-
பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைப்பதை கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பவானி சின்னியம்பாளையம் ரேசன் கடை முன்பு திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உயர்த்தப்பட்ட சர்க்கரை விலையை ரத்து செய்ய வேண்டும். அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், கோதுமை ஆகியவற்றை தடையின்றி வழங்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். பேரூராட்சிகளுக்கு நூறு நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க நிர்வாகி குருசாமி தலைமை வகித்தார். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.லலிதா, விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா தலைவர் எஸ்.மாணிக்கம், வாலிபர் சங்கத்தின் தாலுகா தலைவர் டி.ரவீந்திரன், நிர்வாகிகள் கே.சுப்பிரமணி, ஆர்.வீரன், எஸ்.தம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: