புதுதில்லி,
இந்தியாவில் உள்ள 447 நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் அரசிற்கான வரி செலுத்துவதாக பிடித்தம் செய்த ரூ 3200 கோடி ரூபாயை வரியாக செலுத்தாமல் மோசடி செய்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

ஒவ்வொரு நிறுவனமும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து வருமான வரி செலுத்த கோரும். அதன்படி ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் அரசிற்கு வருமான வரி செலுத்த வேண்டும். இதனை பல நிறுவனங்கள் மாதம் மாதம் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வரி செலுத்துவதற்காக டிடிஎஸ் என்ற பெயரில் பிடித்தம் செய்கிறது.

இந்த பணத்தை முறைப்படி அரசிற்கு செலுத்த வேண்டும். ஆனால் இந்த நிறுவனங்கள் அரசிற்கு செலுத்தி விட்டதாக ஊழியர்களிடம் கூறி விட்டு, அதனை அந்த நிறுவனத்தின் மற்ற செலவினங்களுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்படி 447 நிறுவனங்கள் மோசடி செய்த தொகை மட்டும் ரூ 3 ஆயிரத்து 200 கோடி ஆகும்.
இந்த மோசடி கூட பல்வேறு தொழிலாளர்கள் தொடர்ந்து அரசிடம் எங்களிடம் வரியா பிடித்தம் செய்த பணம் அரசிற்கு சென்று சேர்ந்ததா என்று தெரியவில்லை. நிறுவனங்கள் மோசடி செய்திருப்பதாக புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்தே வருமான வரித்துறையின் டிடிஎஸ் பிரிவு ஆய்வினை மேற்கொண்டது.

அந்த ஆய்வின் முடிவுல் ரூ 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயை 447 நிறுவனங்கள் மோசடி செய்திருப்பது முதல் கட்டமாக தெரிய வந்திருக்கிறது. இந்த மோசடிக்கு பின்னணியில் பெரும்பகுதி ஆளும் கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் பல்வேற கட்டுமான நிறுவனங்கள் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் ஒரு அரசியல் பிரமுகரால் நடத்தப்படும் நிறுவனம் மட்டும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ நூறு கோடியை அரசிற்கு செலுத்தாமல் மோசடி செய்திருக்கிறது.

ஆனாலும் வருமான வரிதுறை இந்த மோசடி கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைப்பது கஷ்டமே என வருமான வரித்துறை சார்த்த சில வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் மோசடி செய்திருப்பவர்கள் பெரும் பகுதி அரசியல் பின்புலத்துடன் இருக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும் அரசுகள் அவ்வளவு எளிதாக அனுமதிக்காது. இவர்கள்தான் ஆளும் கட்சிகளுக்கு நிதி உதவி செய்பவர்கள். ஆகவே இந்த வழக்குகள் பெரும் பகுதி நீர்த்து போவதற்கான வேலைகளே நடைபெறும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: