திருப்பூர், மார்ச் 5 –
திருப்பூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டு கர்ப்பமாக்கிய உறவுக்கார முதியவரையும், இளைஞர் ஒருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தாராபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி வயிற்று வலி என்று தெரிவித்ததால் உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்த சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் சிறுமியின் தந்தையும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை செய்ததில் இந்த சிறுமியை, இவரது தந்தையின் உறவினரான மோசஸ் (வயது 65) மிரட்டி பலமுறை வல்லுறவு கொண்டது தெரியவந்தது. ஏற்கெனவே இந்த சிறுமியிடம் மனோஜ்குமார் (வயது 25) என்ற டிராக்டர் ஓட்டுநர் பழகியதுடன் மாதக்கணக்கில் சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டிருக்கிறார்.இந்த விபரத்தைத் தெரிந்துகொண்டு தந்தையிடம் சொல்லிவிடப் போவதாக சிறுமியை மிரட்டி மோசஸ் வல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியன் தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் மோசஸ், மனோஜ்குமார் ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: