நாமக்கல், மார்ச் 5-
குடிநீர் கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே வைராபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வயக்காடு பகுதி யைச்சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:- வைராபாளையம் ஊராட்சி உட்பட்ட வயக்காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை. மேலும் காவிரி நீரும் முறையாக வினியோகம் செய்யப்படுதில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்கு மிகவும் அவதிபட்டு வருகிறோம். மேலும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. வேலைக்கு செல்லும் பொதுமக்களும் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய இன்னலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு விரைந்து குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: