திருப்பூர். மார்ச் 4-
தமிழக அரசின் சார்பில் உழைக்கும் மகளிர் திட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான இருசக்கர வாகனம் ஞாயிறன்று திருப்பூரில் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மானிய விலையிலான இருசக்கர வாகனம் வழங்கும் விழாவிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இதில், 100 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 மதிப்பில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன்,ஏ.நடராஜன் , உ.தனியரசு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: