ஈரோடு, மார்ச் 4-
சுமை தூக்கும் தொளிலாலர்களுக்கு தொழில் உள்ள முரண்பாடுகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். வேலை செய்யும் உரிமை மற்றும் பகுதிகள் குறித்து தாவா எழும்போதெல்லாம், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் தலையிட்டு ஒழுங்குபடுத்தி வருகின்றனர். 1992 ஆம் ஆண்டு தொழிலாளர்களிடையே வேலை செய்யும் உரிமை பகுதிகள் குறித்து பெரும் தாவா ஏற்பட்டு, ஈரோடு நகரில் சட்ட ஒழுங்குப் பிரச்சனையை தொடர்ந்து உண்டாக்கி வந்தவண்ணம் இருந்தது. இதனால் 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி கோட்டாட்சித் தலைவர் மற்றும் காவல் துணைத் கண்காணிப்பாளர் முன்னிலையில் அன்று இருந்த சங்கங்களிடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின் அடிப்படையில், சர்ச்சைகளை தொழிற் சங்கங்கள் தங்களுக்குள்ளே பேசியோ, அல்லது காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் தலையீட்டின் பேரிலோ தாவாவைத் தீர்த்துக் வருகிறோம்.

நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள எஸ்.கே.எம் அனிமல் புட்ஸ் பீட்ஸ் பி.லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வெளி மாநிலத்திலிருந்து வரும் கால்நடை மற்றும் கோழி தீவனங்களுக்கான மக்காச்சோளம், சோயா பீன்ஸ், கம்பு, புண்ணாக்கு, தவிடு போன்ற பொருள்களை ரயில்வே கூட்ஸ் ஷெட் மூலம் இறக்குமதி செய்து வந்தனர். இதனை நம்பி 50 பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டவர்கள் வாழ்க்கை நடத்தி வந்தனர்.இந்நிலையில், தளம் அமைத்து தங்கள் சரக்குகளை இறக்க துவங்கியுள்ளனர். தங்கள் ஆலைக்குள் இதர வேலைகள் செய்யும் வெளி மாநிலத் தொழிலாளர்களை கொண்டு இறக்கி வருகிறார்கள். இது 40  ஆண்டுகளாக அனுசரிக்கப்பட்டு வரும் நடைமுறையை சீர்குலைப்பதும், போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். இதனால், ஈரோடு நகரம் மற்றும் சுற்றுப்புறங்களிலும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்கும் செயலாகும்.எனவே, ஆட்சியர் இதனை பரிசீலித்து தொழில் அமைதியையும் பாதுகாத்து ஆவண செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் சனியன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் மனு அளித்தனர்.

இதில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், தொழிற்சங்க நிர்வாகியுமான கே.எஸ்.தென்னரசு, சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) மாவட்ட தலைவர் தங்கவேல், செயலாளர் எம்.அர்த்தனாரி, மத்திய தொழிற்சங்க நிர்வாகி விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: