நாமக்கல், மார்ச் 4-
முத்துகாப்பட்டியில் குடியிருப்பு பகுதிகளில் குப்பையில் இருந்து தொடர்ந்து வெளியாகும் புகையால் பொது மக்கள் கடும் அவதிகுள்ளாகின்றனர்.

நாமக்கல் மாவட்டம். முத்துகாப்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு பகுதிகளில் இருந்து குப்பைகளை கிராம ஊராட்சி ஊழியர்கள் சேகரித்து பெரியசாமி கோவில் ரோட்டில் குவித்துவருகின்றனர். இவ்வாறு குவிக்கப்படும்குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகையால் சூழப்பட்டு பொது மக்கள் குழந்தைகள் மூச்சு விட முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தொடர்ந்து குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதை தடை செய்யவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- முத்துகாப்பட்டி குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனைத்தும் பெரியசாமி கோவில் போகும் ரோட்டில் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை தீ வைத்து எரிக்கப்படுவதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு விடமுடியாமல் கடும் அவதிகுள்ளாகின்றனர். தொடர்ந்து இரவு பகல் என 24 மணி நேரமும் இவ்வாறு புகை வெளியேரி வருவதால் பொது மக்களுக்கு சுவாச பிரச்சனை, அலர்ச்ஜி, ஆஸ்துமா, கண் எரிச்சல் போன்றகடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பையை தீ வைத்து எரிப்பதை தடை செய்யவேண்டும் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.