திருப்பூர். மார்ச் 4-
தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை மர்மநபர் ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் ஞாயிறன்று பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு உஷாரான பொதுமக்கள் மர்மநபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் குருவாயூரப்பன் நகர் அருகில் ஞாயிறன்று குழந்தையை கடத்த முயன்றவரை பொதுமக்கள் மின்சார கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர். குருவாயூரப்பன் நகரை அடுத்துள்ள அவிநாசி நகர் பகுதியில் ஞாயிறன்று பள்ளி விடுமுறை தினமென்பதால் குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அப்பகுதிக்கு பழக்கம் இல்லாத பூமிநாதன் என்ற நபர் 4 வயது குழந்தையை கடத்த முயன்றுள்ளர். குழந்தை கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் பூமிநாதன் மீது சந்தேகமடைந்து அவரை பிடிக்க முயன்றுள்ளனர் , பொதுமக்களை கண்டு பயந்துபோன பூமிநாதன் அங்குள்ள மறைவுப்பகுதிக்குள் புகுந்துள்ளார். உடனடியாக அவரை பிடித்த பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர் . சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து பூமிநாதனை மீட்டு விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச்சென்றனர் .இச்சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: