புதுதில்லி:
வங்கிகளுக்கு செல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளும் வசதியை பேடிஎம் அளித்து வருகிறது. அந்த வகையில், ‘பேடிஎம் செயலி’ வாயிலாக மேற்கொள்ளப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சென்ற டிசம்பர் மாதத்தில் 3.3 கோடியாக இருந்தது.ஜனவரி மாதத்தில் அது 5.1 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் 6.8 கோடி அளவிற்கு யூபிஐ பரிவர்த்தனைகள் பேடிஎம்மில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் சில்லரை விற்பனை மையங்களை முகவர்களாகப் பயன்படுத்தி, பேடிஎம் பரிவர்த்தனை சேவையை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: