திருப்பூர், மார்ச் 2 –
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு பகுதியில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

பெருந்தொழுவு நால் ரோட்டில் தொடங்கி கரட்டுப் புதூர், கைகாட்டி வழியாக மீண்டும் பெருந்தொழு நால்ரோட்டில் வந்து முடிவடைந்தது. இந்த வட்டாரத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தானில் பங்கேற்றனர். நிறைவாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. இதில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சிகாமணி, ஒன்றியச் செயலாளர் முருகேசன் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்று வெற்றி பெற்றோருக்கு பரிசளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: