பொள்ளாச்சி, மார்ச் 2-
பொள்ளாச்சி அருகே கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனை சிலர் தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல குறைபாடுகளுக்கு உள்ளாகின்றனர். மேலும், இந்த பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் உண்ணுவதால் அவற்றிக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே இங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, குப்பை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: