சேலம்:
பளுத்தூக்கும் போட்டியில் தேசிய அளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவி வெற்றி பெற்றும் இதுவரை அரசின் உதவிகள் கிடைக்காமல் உள்ளார். அரசின் உதவிகள் கிடைத்தால் ஓலிம்பிக் போட்டியில் வென்று சாதனை புரிய ஏங்கும் மாணவி.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கதிஜா பேகம். இவர் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற வெயிட் லிப்டிங், பவர் லிப்டிங் விளையாட்டில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மிகவும் ஏழ்மை நிலையில் வளர்ந்த இவருக்கு தந்தையும் இல்லை, தாய், சகோதரி அரவனைப்பில் வாழும் பெண். சிறு பால் வியாபாரம் செய்து தனது தாய் அவரை வளர்த்து வருகிறார். விளாயாட்டில் ஆறாம் வகுப்பு முதல் ஆர்வம் வந்துள்ளது. குறிப்பாக சாட்புட் விளாயாட்டில் அதிக ஆர்வத்துடன் விளையாடியுள்ளார்.

தனது பன்னிரண்டாம் வகுப்பில் தேசிய அளவில் வெற்றி பெற்றதனால் நாமக்கல் முத்தாயம்மாள் கல்வி நிறுவனத்தில் இலவசமக கல்லூரி சேர்கையில் பிபிஏ பட்டம் பெற்றார். பாவை கல்விநிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். வெயிட் லிப்டிங் மற்றும் பவர் லிப்டிங் விளையாட்டில் 2012ம் ஆண்டு முதல் விளையாட துவங்கியுள்ளார்.

தற்போது தேசிய அளவில் நடைபெற்ற பெடரேசன் கப் போட்டியில் வெற்றி பெற்று ஆசியா போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். தேசிய அளவில் பல போட்டிகளில் வெற்றி பெற்றும் மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும், அரசு வேலையும் வழங்க வில்லை.
இதுபற்றி கதிஜா பேகம் தெரிவிக்கையில், தான் சார்ந்த விளையாட்டு போட்டியில் பெண்கள் அதிக அளவில் வந்து தங்களது பங்களிப்பை தர வேண்டும். மேலும் விடா முயற்சி இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். உதாரணமாக தாங்கல் படத்தை பற்றியும் அதில் விடா முயற்ச்சி பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்தார். தமிழக அரசு விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக அரசு விளையாட்டிற்கு சிறப்பு கூடங்களை அமைத்து குறிப்பாக பெண்கள் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், விளையாட்டில் சாதித்த பெண்களுக்கு அரசு பணிகள் வழங்கும் போது உள்ளூரில் பணி நியமனம் வழங்க வேண்டும். வேறு மாநிலங்களில் பணி வழங்கும்போது சில அடிப்படை பயிற்சிகள் விட்டு போக வாய்ப்புள்ளது. தனக்கு அரசு பணி வழங்காமல் இருப்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மாநில அரசின் கவனத்திற்கு பல முறை தனது அரசு பணி சம்மந்தமாக மனு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தனது வெற்றிக்கு காரணமான சேலம் மகாத்மா காந்தி ஜிம்கோச் பொன்.சடையன், முத்தாயம்மாள், பாவை கல்வி நிறுவன உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தேசிய பளுத்தூக்கும் வீராங்களை செல்வி கதிஜா பேகம் தற்போது சேலத்தில் உள்ள சிறுசிறு ஜிம்களில் பயிற்சியாளராக சிறு சம்பளத்திற்கு பணியாற்றிவருகிறார். அந்த மாணவியின் கனவு ஒலிம்பிக் போட்டியில் விளாயாடி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆசை என குறிப்பிட்ட அவர் தன்னை ஊக்கப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

பயிற்சியாளர் பொன்.சடையன்
தேசிய அளவில் மாணவி வெற்றி பெற காரணமாக இருந்த ஒருவரும் சேலம் மகாத்மா காந்தி ஜிம்மை சார்ந்த பயிற்சியாளர் பொன்.சடையன் தெரிவிக்கையில், கதிஜா பேகம் மிகச்சிறந்த விளையாட்டு வீரர். அவரின் ஏழ்மை நிலையிலும் இன்று வெயிட் லிப்டிங் விளையாட்டில் சாதனை படைத்துள்ளார். அவர் மேலும் சாதனைகள் படைக்க அரசின் உதவிகள் அவருக்கு கிடைக்க வேண்டும்.

தங்களால் முடிந்த வரை சிறுசிறு உதவிகள் செய்துவருகிறோம். தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் உதவிகள் கிடைக்க பெற்றால் அவர்மேலும் சாதனைகள் படைப்பார். அவர் தன்னோடு மட்டுமல்லாமல் மற்ற விளாட்டு வீரர்களுக்கும் பயிற்சி தருவது அவரின் தனித்தன்மை எனவும், எம்பிஏ வரை படித்த அவருக்கு மத்திய, மாநில அரசுகள் அரசு வேலை வழங்கி அவரை விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க ஊக்க படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விளையாட்டில் சாதனை படைக்க பல மாணவிகள் முயற்சி செய்யும் காலத்தில் அவ்வர்களுக்க அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பான பயிச்சிகள் தர வேண்டும். சாதனை புரியும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்திட அரசு புதிய சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
– எழில், சேலம்

Leave a Reply

You must be logged in to post a comment.