கோவை, மார்ச் 1-
கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு, காளப்பட்டி கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் திரிபுரா பவுண்டேஷன் சார்பில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் பெ.நடராஜன் தலைமை வகித்தார். திரிபுரா அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ் வரவேற்றர். வாசகர் வட்ட உறுப்பினர்கள் பெ.தருமலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். இதில் “வாசிப்பை நேசிப்போம்”என்ற தலைப்பில் கல்வியாளர் பெ.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். முன்னதாக, வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும், இந்தவிழாவில் வாசகர் வட்ட உறுப்பினர் சுதாகர், பெ.கண்ணன் மற்றும் திரிபுரா பவுண்டேஷன் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, காளப்பட்டி நூலத்தின் நூலகர் ச.சரவணன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: