கோவை, மார்ச் 1-
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்
சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

வேளாண் பல்கலை கழக அரங்கில் புதனன்று நடைபெற்றஇந்நிகழ்விற்கு பல்கலைகழக பதிவாளர் முனைவர் சுதாகர் முன்னிலை வகித்தார். தாவர இனப்பெருக்க மைய இயக்குநர்முனைவர் ஆர்.ஞானம் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எம்.எஸ்.முகமதுபாசா, அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி தேசிய அறிவியல் தினம் குறித்து உரையாற்றினார்.இந்த விழாவில் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் தேசிய பொருளாளரும், மதுரை காமராஜர் பல்கலைக் கழக உயிரி தொழில்நுட்ப துறையின் முன்னாள் தலைவருமான முனைவர் எஸ். கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவர் ஒருமலரின் வாசனை பரவவேண்டும் என்கிற தலைப்பில் இந்தியாவின் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் விஞ்ஞானி ஈ.கே.ஜானகி அம்மாள் குறித்து சிறப்புரையற்றினார். இறுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் ரிஷி.சரவணன் நன்றி கூறினார். இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் அம்சா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: