சிரியாவில் அரச படைகள் பொதுமக்களை கொன்று குவிப்பதாக அந்த நாட்டின் அழிவுக்கு காரணமான அமெரிக்கா பிரசாரத்தை செய்து வருகிறது. ஆனால் இந்த பிரச்சனையின் பின்னணி பற்றி தெரியாத தமிழ் ஊடகங்கள் அமெரிக்க பிரசாரத்தை அப்படியே மீள் பதிப்பு செய்துவருகின்றன. பத்தாயிரத்து எழுநூறு கி.மீ தூரத்தில் உள்ள அமெரிக்காவுக்கு சிரியாவில் என்ன வேலை என்று இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை.
ரஷ்யாவுக்கு வெளிநாட்டில் உள்ள ஒரேயொரு கடல்படைத்தளம் சிரியாவில்தான் உள்ளது. நீண்ட காலமாக சிரியாவானது ரஷ்ய ஆதரவு நாடாக இருந்துவருகிறது. இதனால் சிரியாவில் கலவரத்தை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்கிறது. மேலும் சிரியா ஹிஸ்புல்லா போராளிகளுக்கு ஆதரவளிப்பதால் அந்த நாட்டை அழிப்பதில் இஸ்ரேல் முனைப்புடன் உள்ளது.
2011ல் அரபு வசந்த குழப்பங்களை ஏற்படுத்திய அமெரிக்கா சிரியாவிலும் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா சிரிய அதிபர் பதவி விலகவேண்டும் என்று கோரியிருந்தார்.
2012ல் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்த நிலையில் 2013ல் சிரியாவில் இரசாயன தாக்குதல் நடந்தது. இதனை சிரிய அரசபடை செய்ததாக உடனடியாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இவ்வாறு தொடர்ந்தும் அமெரிக்கா நேரடியாக சிரியாவில் குழப்பங்களை தூண்டி வந்துள்ளது.
இதற்காக ஆயுத குழுக்களை உருவாக்கி சிரிய அரசாங்கத்துக்கு எதிராக உள்நாட்டு போரை நடத்தி வருகிறது. இந்த குழுக்கள் மக்களை கேடயமாக வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யா இதை முறியடிக்க சிரிய அரசாங்கத்துக்கு உதவி வருகிறது. துருக்கி போன்ற நாடுகளும் தமது நலன்களுக்காக கிளர்ச்சி குழுக்களை உருவாக்கி அழிவினை ஏற்படுத்தி வருகின்றன.

சிரியா முதல்கொண்டு பல உலக நாடுகளில் இடம்பெற்று வருகின்ற போர்கள், உள்நாட்டு போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணமாக இருந்து வருகிறது என்பதை தமிழ் ஊடகர்கள் புரிந்துகொள்ளாமல் உள்ளனர்.

தென்னமெரிக்காவில் எண்ணெய்வளம் கொண்ட செழிப்பான வெனிசுவேலா நாட்டில் அமெரிக்க நிறுவனங்களே ஆக்கிரமித்திருந்தன. 2000 ம் ஆண்டில் இந்த நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து அமெரிக்கா செயல்பட்டது. குறிப்பாக முன்னாள் அதிபர் சாவேஸ் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக செயல்பட்டார். மக்களும் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.
அமெரிக்கா அங்கு ஆட்சி கவிழ்ப்புக்காக கலவரங்களை ஏற்படுத்தியது. புற்று நோயால் சாவேஸ் இறந்த பின்னர் அமெரிக்கா தனது எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்த உள்நாட்டு கலவரங்களை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு தென்னமெரிக்காவில் பல நாடுகளில் அமெரிக்கா காலம் காலமாக கலவரங்களை ஏற்படுத்தி வருகிறது. தனது நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தராத தலைவர்களை கொன்றது. பதவி கவிழ்த்தது.

ஏலவே வட ஆபிரிக்காவில் லிபியா முதல்கொண்டு பல நாடுகளில் அரபு வசந்தம் என்ற பெயரில் அமெரிக்கா கலவரங்களை ஏற்படுத்தி உள்நாட்டு போரை உருவாக்கியது. போரால் சீரழிந்த அந்த நாடுகளில் தனது படைகளை வைத்ததுடன் எண்ணெய் வளத்தையும் கைப்பற்றிக்கொண்டது.

ரஷ்யாவுக்கு அண்டை நாடான உக்ரெய்னில் அமெரிக்கா உள்நாட்டு கலவரத்தை உருவாக்கியது. அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ரஷ்யாவுக்கு எதிராக சதி திட்டங்களை செய்து வருகிறது.

இவ்வாறு உலகம் முழுவதும் அமெரிக்கா தனது முதலாளித்துவ நலன்களுக்காக போர்களையும் கலவரங்களையும் உருவாக்கி அமைதியை கெடுத்து வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.