பெங்களுரு:
பெங்களுவில் இளம் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிபிஎம் ஐடி கிளை மார்ச் 4இல் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களுரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமல்லாத இதர தொழில் பிரிவுகளிலும் பணியாற்றும் இளம் ஊழியர்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து விவாதிக்க இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. மார்ச் 4 பிற்பல் 3 மணிக்கு ஜெயின் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கம் குறித்து வழக்கமான சுவரெழுத்து, போஸ்டர், துண்டுப்பிரசுரங்கள் மட்டுமல்லாது சமூக ஊடகங்கள் மூலமும் இந்த பிரச்சாரம் நடந்து வருகிறது.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, ஏ.கே.பத்மாநாபன் ஆகியோர் கருத்தரங்கத்துக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்திகள் சமூக ஊடக பிரச்சாரத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: