சிவகங்கை
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா துவக்கத்தை முன்னிட்டு ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
விழாவில் அறிவியல்  சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து காட்டினர். மாயப்பந்து சோதனையை கிருத்திகாவும், எரிவதற்கு காற்று அவசியம் சோதனையை நித்யகல்யாணியும்,காற்றில் கார்பன்டை ஆக்ஸைடு சோதனையை காயத்ரியும்,பன்முக எதிரொலிப்பு சோதனையை சக்தியும்,உப்பு நீரின் அடர்த்தி கண்டுபிடித்தல் சோதனையை அஜய் பிரகாஷும்,காற்றில் அதிர்வுகள் சோதனையை ரஞ்சித்தும்,சின்னம்மாளும்  நேரடியாக செய்து காட்டி விளக்கம் அளித்தனர்.
அறிவியல் தினம் தொடர்பாக மாணவர்கள் உமாமகேஸ்வரி,கார்த்திகேயன் பேசினார்கள். நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.
 

 

Leave a Reply

You must be logged in to post a comment.