அகர்தலா:
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பிப்ரவரி 18- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான தேர்த லுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இதில் நியூஸ் எக்ஸ் டிவி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் இடதுசாரி கூட்டணி 45% -46% வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்
பட்டுள்ளது. பாஜக கூட்டணி 51% வாக்குகளை பெறும் என கூறியுள்ளது.ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பில் இடதுசாரி கூட்டணி 40% வாக்குகளும், பாஜக கூட்டணி 49% வாக்குகளும் பெறும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. சிவோட்டர்ஸ் நிறு வனம் நடத்திய கருத்து கணிப்பில் இடதுசாரிக் கூட் டணி 44.3% வாக்குகளும், பாஜக கூட்டணி 42.8% வாக்குகளும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறியதாவது:
திரிபுரா மாநிலத்தில் இடதுமுன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மக்களை குழப்புவதற்காக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு நடத்தப்படுகிறது.பீகார் மற்றும் தில்லிசட்டப்பேரவை தேர்தலின் போதும், அங்கு பாஜக வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கள் கூறின. ஆனால் பாஜக படுதோல்வியடைந்தது. இதை மறக்க முடியாது. திரிபுரா மக்கள் இடதுசாரி அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பாளர் கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 3-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.