குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சித்தாடி கிராமத்தில் உள்ள இல்லத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய இயக்கத்தின் முதுபெரும் தலை
வர் கோ.வீரய்யன் அவர்களை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமையன்று நேரில் சந்தித்தார்.
அப்போது, மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டமைக்கு கே.பால கிருஷ்ணனுக்கு கோ.வீரய்யன் வாழ்த்துக் களை தெரிவித்தார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, குடவாசல் பகுதிக்குழு செயலாளர் ஆர்.லெட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு குடவாசல் ஒன்றியக்குழு சார்பில் சிறப்பான வரவேற் பளிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.