மும்பை:
நடிகை ஸ்ரீ தேவியின் மரணம் விபத்தால் தான் நிகழ்ந்துள்ளது என துபாய் அரசு அதிகாரபூர்வத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக துபாய் ஊடக அலுவலகத்தின் மூலம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவல் வருமாறு: துபாயில் இதுபோன்ற மரண சம்பவங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து வித வழிமுறைகளும் பின்பற்றப்பட்டிருப்பதாகவும்,  தடயவியல் சோதனை அறிக்கையில் கூறியபடி ஶ்ரீதேவியின் மரணம் நீரில் மூழ்கிய விபத்தாலேயே நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல் இந்த வழக்கின் அனைத்து விதமான விசாரணைகளும் இத்துடன் முடிக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் ஶ்ரீதேவி உடல் எம்பாமிங் செய்தவுடன்  இந்திய நேரப்படி 6.30 மணியளவில் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்படவுள்ளது. மும்பை நகரிலுள்ள பவன் ஹான்ஸ் என்ற இடத்தில் ஶ்ரீதேவியின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பால் ஶ்ரீதேவியின் மரணத்தில் இருந்து வந்த பல சந்தேகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.