தீக்கதிர்

லூதியானா மாநகராட்சியில் பாஜக படுதோல்வி…!

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாநகராட்சியை, காங்கிரசிடம் பறிகொடுத்து, பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.

கடந்த டிசம்பரில் பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியானது, அமிர்தசரஸ், பாட்டியாலா, ஜலந்தர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் வெற்றி பெற்றது. ஏராளமான நகராட்சிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதனிடையே, லூதியானா மாநகராட்சிக்கு கடந்த சனிக்கிழமையன்று தேர்தல் நடைப்பெற்ற நிலையில், செவ்வாயன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், மாநகராட்சியில் மொத்தமுள்ள 95 வார்டுகளில் 62 இடங்கள் வரை காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. அகாலிதளம் 11 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் மட்டுமே முன்னிலை பெற்று பின்தங்கியுள்ளன.