ஷில்லாங்/கோஹிமா:
மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 67 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு, செவ்வாய்க்கிழமையன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேகாலயாவில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைப்பெற்றது. நாகாலாந்து மாநில வாக்குப்பதிவின்போது சில இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. இதில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இவ்விரு மாநிலங்களிலும் 67 சதவிகித வாக்குகள் பதிவாகின. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 தொகுதிகள் உள்ள நிலையில், மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு மட்டுமே செவ்வாய்க்கிழமையன்று வாக்குப் பதிவு நடந்தது.இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மார்ச் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.