காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இப்பள்ளி கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

அதனால், முசரவாக்கம் ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், கணினி மற்றும் அதன் சார்பு பொருட்கள் என ரூ.2.5லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர். முசரவாக்கத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க, கூத்தாட்டம், புலியாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். சீர் வரிசை பொருட்களை தாம்பால தட்டில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பள்ளியின் நிர்வாகிகளிடம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆங்கில வழி ஆய்வகத்தை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ச.தயாளன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சையது காதர், உதவி தொடக்க கல்வி அலுவலர் சிவசங்கரன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நந்தாபாய், பள்ளியின் தலைமையாசிரியர் கமலக்கண்ணன், பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், ஊர்மக்கள் திரண்டிருந்தனர். இஸ்லாமிய பெண்மணியின் குழந்தை கிருஷ்ணன் வேடம் போட்டு வந்திருந்ததை அனைவரும் ஆசையுடன் பார்த்தனர். ஊரே திரண்டு வந்து, குடும்ப விழாவில் கலந்து கொள்வது போன்று பள்ளியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

இது குறித்து, ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் மயில்வாகனன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாவட்டத்திலேயே சிறந்த தொடக்க பள்ளியாக இப்பள்ளி தேர்வாகியுள்ளது. பள்ளி வளர்ச்சியில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கினார்கள். ஊர் மக்களின் முழு ஒத்துழைப்பால், ஆங்கில வழி ஆய்வகம் திறப்பின் மூலம், மாணவ மாணவிகள் முழு ஆங்கில மொழி திறமை பெற்று நல்ல வளர்ச்சியடைவார்கள் என்றார். கடந்த 2016ம் ஆண்டு இப் பள்ளிக்கு கிராம மக்கள் தொடு திரை கணினி வழங்கினர். கல்வியின் பால் அக்கறை செலுத்தும் முசரவாக்கம் ஊர் மக்களை பலரும் பாராட்டினர்.

பேட்டி –

Leave A Reply

%d bloggers like this: