புதுதில்லி,
நாகலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் தலா 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இரு மாநிலங்களிலும் 59 தொகுதிகளிலேயே தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதற்காக இன்று காலையில் வாக்காளர்கள் வரிசையில் வந்து நின்றனர்.  இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.  இன்று மாலை 4 மணிவரை தேர்தலில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற திரிபுரா தேர்தலில் பதிவான வாங்குகள் , மற்றும் நாகாலாந்து மேகாலயா தேர்தலில் பதிவாகும் வாக்குகளும் மார்ச் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் மோன் மாவட்டத்தின் திஜிட் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திடீரென குண்டு வெடித்தது. இதனால் வாக்காளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.