திருச்சி: திருச்சியில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வெள்ளனூர் பகுதியில் கிருபாவதி என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி பேருந்துக்காக சாலை ஓரம் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக அதி வேகத்தில் வந்த தனியார் பேருந்து ஒன்று மாணவியின் மது மோதியது. இந்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த பொது மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.