பெங்களூரு:
நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 6.9 சதவிகிதமாக இருக்கும் என்று பிரபல ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கணித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18-இன் முதலாம் காலாண்டில் 5.7 சதவிகிதம் அளவிற்கு மிக மோசமான சரிவைச் சந்தித்து.கடந்த ஆண்டு இதே காலத்தில் ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவிதமாக இருந்த நிலையில், அதில் ஏற்பட்ட வீழ்ச்சி மத்திய பாஜக அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
முன்யோசனை இல்லாமல் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கம், உரிய திட்டமிடல் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஆகியவையே, 5.7 சதவிகிதம் என்ற சரிவுக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் மார்ச் காலாண்டின் வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருந்தது. ஜூன் காலாண்டு வளர்ச்சி சீனாவின் வளர்ச்சியை விடக் குறைவாகும். கடந்த காலாண்டில் சீனாவின் வளர்ச்சி 6.9 சதவிகிதமாக இருந்தது. இதனிடையே, அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் வளர்ச்சி விகிமானது 7 சதவிகிதத்தை எட்டக்கூடும் என்றும் அனைவரும் எதிர்பார்த்தனர்.தற்போது நடப்பு நிதியாண்டின் அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய ஆய்வறிக்கையை பிரபல ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியானது 6.9 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது நடப்பு நிதியாண்டின் மிகச் சிறந்த ஜிடிபி வளர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.