பஞ்சாப்,
சண்டிகரில், மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், பயின்ற கிருஷ்ணபிரசாத் என்ற மாணவர் சந்தேகத்திற்கு இடமான நிலையில் உயிரிழந்துள்ளார்.
இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி-புவனேஸ்வரியின் மூத்த மகன் ஆவர். இவர் சண்டிகரில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான  (PGIMER)-ல் மருத்துவ மேல் படிப்பு முதலாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் கிருஷ்ணபிரசாத் தங்கியிருந்த விடுதி அறையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில்  மரணமடைந்துள்ளார். இதுகுறித்து ராமேஸ்வரத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு இன்று காலையில் தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ண பிரசாத்தின் மரணம், அங்கும் பயிலும் பல தமிழக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், மாணவனின்  உடற்கூறு ஆய்வு இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ண குமாரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார்.மேலும், அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்ரவிட்டுள்ளதாகவும்  முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

You must be logged in to post a comment.