மதுரை,
காதலிக்க மறுத்ததால், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த  சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலமுருகன் என்பவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்தார். இந்நிலையில் சிறுமியை பின் தொடர்ந்து, தன்னை காதலிக்குமாறு பாலமுருகன் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் சிறுமியின் தந்தை பாலமுருகன் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆத்திரமடைந்த அந்த இளைஞர் கடந்த 16 ஆம் தேதி சிறுமி, பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, சிறுமியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, ஓடி வந்த பொதுமக்கள் தீயை அணைத்து, திருமங்கலம் அரசு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் உடல் முழுவதும் தீ பரவியதால், மருத்துவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் காவல் துறையினர், பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட சிறுமி, இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: