சென்னை,
தமுஎகச சார்பில் 2017ம் ஆண்டிற்கான இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கான நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தமுஎகச மாநிலத்தலைவர் ச.தமிழ்செல்வன், மாநிலப்பொதுச்செயலாளர் சு.வேங்கேடசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
2017 ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள் /குறுந்தகடுகள் வரவேற்கபடுகின்றன. 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள்/ குறுந்தகடுகள் மட்டுமே அனுப்பப்படவேண்டும்.ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.2018 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால்/கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்:
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
57/1,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்)
மதுரை-625001  போன்:0452-2341669
விருதுகள் விபரம் :
1. தோழர். கே. முத்தையா நினைவு விருது – தொன்மைசார்  நூல்
2. கே.பாலசந்தர் நினைவு விருது – நாவல்
3. சு.சமுத்திரம் நினைவு விருது – விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு
4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது – கலை இலக்கிய விமர்சன நூல்
5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் –செல்லம்மாள்(ப.ஜெகந்நாதன்) நினைவு விருது – கவிதைத்தொகுப்பு
6. அகிலாசேதுராமன் நினைவுவிருது -சிறுகதைத்தொகுப்பு
7. வ.சுப.மாணிக்கனார்நினைவுவிருது – மொழிபெயர்ப்பு
8. பா.இராமச்சந்திரன் நினைவுவிருது- குறும்படத்துக்கு
8. என்.பி.நல்லசிவம்-ரத்தினம் நினைவு விருது – ஆவணப்படத்துக்கு.
தமுஎகச வழங்கும்
கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள்
9. குழந்தைகள் இலக்கிய நூல்
10. மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல்
போட்டிக்கு வந்த நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
விருதுக்குத் தேர்வுசெய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும்/குறுந்தகடுக்கும் , “தமுஎகச விருதும்”  சான்றிதழும்    ரூ 5000 ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.  தமுஎகச சார்பில் நடத்தப்படும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 

Leave a Reply

You must be logged in to post a comment.