ஈரோடு, பிப். 26-
அரசு பள்ளிக்கு விளையாட்டுத் திடல் அமைக்க புறம்போக்கு நிலத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கித்தர வேண்டுமென கிராமமக்கள் மனு அளித்தனர்.

இதுகுறித்து ஈரோடுமாவட்டம், பெருந்துறை வட்டம், திங்களூர் உள்வட்டம், நிச்சாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளிக்கு தென்பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை வெளியூரைச் சேர்ந்த சில நபர்களுக்கு பட்டா அளிக்க வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொள்ளவதாகத் தெரியவருகிறது.இந்த நிலத்தை அரசுப்பள்ளிக்கு விளையாட்டுத் திடல், சத்துணவுக்கூடம், சமுதாயக் கூடம், நூலகம், அஞ்சல் நிலையம், ஆரம்பசுகாதார நிலையம் போன்ற பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: