ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சலுகை வழங்குவதாக உறுதியளித்த மத்திய மோடி அரசு தொடர்ந்து எங்களை ஏமாற்றி வருகிறது. இதனால் மக்கள் கொந்தளிக்கின்றன. என்னுடைய பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது என மோடி அரசுக்கு  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

 தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ சார்பில் கடந்த மூன்று தினங்களாக விசாகப்பட்டினத்தில் மாநாடு நடந்தது. இதில் முதல் 2 நாட்களில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான பணிகளும், கடைசி நாளான இன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது குறித்த நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது :
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபின், சிறப்புச் சலுகையையும், நிதி உதவியும் ஆந்திராவுக்கு அளிப்பதாக மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, உறுதி அளித்தது. ஆனால், பாஜக அரசு தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால், ஆந்திராவில் உள்ள மக்கள் மனம் வெறுத்து, கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்து எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அதன்பின் மாநிலத்தையும், தலைநகரையும் கட்டமைக்க கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறோம். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, புதிய தலைநகரை நிர்மானித்துள்ளோம், ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசுக்காக கொடுத்து இருக்கிறார்கள். என்னிடம் இருந்து மக்கள் அதிகமான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபின் மோடி அரசு   கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற பல முறை கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்க மறுத்து வருகிறது. எனது பொறுமைக்கும் ஓர் எல்லையிருக்கிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.