கேப்டவுன்:
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக முதல் நான்கு டி-20 போட்டியில் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக களமிறங்கவில்லை.கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்று, 7 ரன் வித்தியாசத்தில் வெற்றியோடு டி-20 தொடரையும் கைப்பற்றி கொடுத்தார். கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் கேப்டன் கோலி தனது திருமணத்துக்காக விடுப்பில் சென்றிருந்த காரணத்தினால் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வென்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில் சனியன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக முதல் நான்கு டி-20 போட்டியில் வென்று அசத்தியுள்ளது.இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த மிஸ்பா-உல்-ஹக்,அப்ரிடி,சர்பிராஸ் அகமது மற்றும் இலங்கையை சேர்ந்த சங்ககரா,மலிங்கா ஆகியோர் தொடர்ச்சியாக முதல் நான்கு டி-20 வெற்றி பெற்றுக் கொடுத்தனர்.தற்போது இந்த வரிசையில் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.