ஈரோடு,பிப்.26-
ஜம்பை பேரூராட்சியில் திடக்கழிவு திட்டம் என புதிய முறையில் வரி வசூல் செய்யப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, ஜம்பை பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் தனியாக வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. முன்னறிவிப்பு எதுவும் செய்யாத நிலையில் வீட்டு வரி, குடிநீர் வரி உட்பட பல வரிகளில் இந்த வரியையும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதி முழுவதும் சாக்கடை, சாலை என எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காத நிலையில், ஒரு குடும்பம் வருடத்திற்கு ரூ.240 வரை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.

எனவே, இந்த வரியினை மறுபரிசீலனை செய்து உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மேலும், பேரூராட்சி முழுவதும் போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி தாலுகா செயலாளர் ஜெகநாதன் தலைமையில் திங்களன்று மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் அளிக்கப்பட்டது. அப்போது, சிபிஎம் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், கொளந்தசாமி, மாணிக்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.