நாமக்கல், பிப்.26-
தூத்துக்குடியில் நடைபெற்ற சிபிஎம் மாநில மாநாட்டு செந்தொண்டர் பேரணியில் கொடூர தாக்குதல் தொடுத்த ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் உள்ளிட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்யக்கோரி நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆவேச ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஐ.ராயப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராயணன் கண்டன உரையாற்றினார். இதில் நகரக்குழு உறுப்பினர்கள் நடேசன், எஸ்.ஸ்ரீனிவாசன், செந்தில், சுப்பிரமணி, தங்கவேல், எம்.சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் குளக்கரை திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேச குழு செயலாளர் பி.ஜெயமணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் தேன்மொழி, பி.ராமசாமி, சிங்காரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் கண்டன உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரபாகரன், லெனின் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜெயமணி கண்டன உரையாற்றினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் என்.பாலுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

வெப்படையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள் கண்டன உரையாற்றினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.தனபால் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுந்தரம், சுரேஷ், செந்தில்குமார், ரமேஷ் உள்பட திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.