தில்லி: 
11-வது சீசனுக்கான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் செயல்படுவார் என அதன் ஆலோசகர் சேவாக் அறிவித்துள்ளார்.இந்தாண்டு ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்குகிறது.
ஐபிஎல் ஆரம்பம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின்,11-வது சீசனுக்கான புதிய ஏலம் அடிப்படையில் அவர் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகரான இருக்கும் விரேந்திர சேவாக்,பஞ்சாப் கேப்டனாக ரவிசந்திரன் அஸ்வினை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
யுவராஜ் சிங், ஆரோன் பின்ச், டேவிட் மில்லர் போன்ற முன்னணி வீரர்கள் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தாலும் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.