துபாய்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து இந்திய வீரர்களின் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.3 டி-20 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 14 இடங்கள் தாவி 28-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.இந்த தொடரில் மிக சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் 24 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
கோலி பின்னடைவு                                                                                                                                                                 தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கோலி, டி-20 தொடரில் சொதப்பினார். முதல் போட்டியில் 26 ரன்களும், 2வது போட்டியில் 1 ரன்னும், மூன்றாவது போட்டியில் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால், கோலி 3 இடங்கள் பின்னடைவு ஏற்பட்டு தரவரிசையில் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.பும்ரா 4-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு தாவியுள்ளார். இந்திய அணியைப் பொறுத்தவரையில் 2-1 என வென்றாலும் வெறும் 2 புள்ளிகள் மட்டும் அதிகரித்துள்ளதால் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லாமல் 3-வது இடத்தில் நீடிக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.